இனி டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்கள் மட்டுமே!

இனிவரும் காலங்களில் டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்கள் நடைபெறும் வண்ணம் மாற்றியமைக்கப்பட உள்ளது.

by Lenin, Dec 15, 2017, 16:32 PM IST

இனிவரும் காலங்களில் டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்கள் நடைபெறும் வண்ணம் மாற்றியமைக்கப்பட உள்ளது.

Cricket

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 ஓவர்கள் கொண்ட டி20 என மூன்று வகை போட்டிகள் என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

டி20 போட்டிகள் வரத் தொடங்கியவுடன் டெஸ்ட் போட்டிகள் மீது ரசிகர்களின் ஆர்வம் குறைந்து வருகிறது. இது பாரம்பரிய போட்டியாக கருதப்படும் டெஸ்டிற்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதினர்.

இதன் பலனாக தற்போது, டெஸ்ட் போட்டிகளை பகல் - இரவு போட்டியாக மாற்ற ஐ.சி.சி மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தீவிர முயற்சி மேற்கொண்டது. இந்த திட்டத்தின்படி இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் பங்கேற்கும் ஆஷஸ் தொடரின் அடிலெய்ட் டெஸ்ட் இரவு பகல் ஆட்டமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்களாக குறைக்க தென் ஆப்பிரிக்கா அடுத்த முயற்சியை கையில் எடுத்தது. இதற்கு ஐ.சி.சி. சம்மதம் தெரிவித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் வருகிற 26-ந்தேதி ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியை நடத்துகிறது.

இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. விதிமுறைகள் அனைத்தும் இந்த டெஸ்ட்போட்டியில் நடைமுறைக்கு வருகின்றன.

விதிமுறைகள்:

6.30 மணி நேரம் நடக்கும் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு நாள் 98 ஓவர்கள் வீச வேண்டும். பாலோ-ஆன் 150 ரன்களாக நிர்ணயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியின் கால அட்டவணை:

முதல் செசன்: மதியம் 1.30 மணி - 3.45 மணி
தேநீர் இடைவேளை: மதியம் 3.45 - மாலை 4.05 மணி
2-வது செசன் : மாலை 4.05 மணி - மாலை 6.20 மணி
இரவு சாப்பாடு இடைவேளை : மாலை 6.20 மணி மணி - இரவு 7.00 மணி வரை
3-வது செசன் : இரவு 7 மணி - இரவு 9 மணி

You'r reading இனி டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்கள் மட்டுமே! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை