உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் ஜப்பானை வீழ்த்தி பெல்ஜியம் அணி வெற்றிப்பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று மூன்று அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில், இரண்டாவதாக பெல்ஜியம் & ஜப்பான் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் 0&0 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
பின்னர், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி வீரர்கள் அதிரடியாக ஆடியதை அடுத்து, 48வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஜெங்கி ஹராகுசி ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து, 52வது நிமிடத்தில் டகாஷி ஒரு கோல் அடித்து 2&0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து, பெல்ஜியம் அணியின் ஜேன் வெர்டோகன் ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து 74வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மரானே பெலானி ஒரு கோல் அடித்தார். இதனால், இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது.
இதைதொடர்ந்து, இரு அணிகளுக்கும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி பெல்ஜியம் வீரர் நாசர் சடி ஆட்டத்தின் 94வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது வெற்றியை உறுதி செய்தது.
இதன்மூலம், 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி பெல்ஜியம் அணி வெற்றிப்பெற்று காலிறுக்கு முன்னேறியது.