மோடியின் பிட்னஸ் வீடியோவுக்கு ரூ.35 லட்சம் செலவு

by Isaivaani, Jul 2, 2018, 22:37 PM IST

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்ட பிட்னஸ் வீடியோ எடுப்பதற்காக ரூ.35 லட்சம் செலவானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீப காலமாக, பிட்னஸ் சேலஞ்ச் வீடியோ ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் கோலி பிரதமர் மோடிக்கு பிட்னஸ் சேலஞ் விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட மோடி, சமீபத்தில் பிட்னஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில், பிரதமர் மோடி பல வித யோகானங்களையும், உடற்பயிற்சியையும் செய்வார். இந்த வீடியோ வைரலானாலும், நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர். இந்த வீடியோ தொடர்பான அப்டேட் ஒன்று வந்துள்ளது. அதாவது, இந்த வீடியோவிற்காக மோடி செலவிட்ட தொகை எவ்வளவு என்று தெரியவந்துள்ளது.

இந்த வீடியோ சுமார் மூன்று நாட்கள் எடுக்கப்பட்டுள்ளது. இது பின்னர் இரண்டு நாட்களுக்கு எடிட் செய்யப்பட்டுள்ளது. மேலும், எடிட்டிற்காக பாலிவுட்டில் புகைப்பட கலைஞர் ஒருவர் வரவழைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன.

இந்த வீடியோ எடுப்பதற்காக மட்டும் ரூ.35 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் கணக்கில் ரூ.12 லட்சம் செலவு செய்து பிட்னஸ் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பிட்னஸ் வீடியோவுக்கு மோடி ரூ.35 லட்சம் செலவு செய்வதா என்று நெட்டிசன்கள் வாயைப்பிளந்துள்ளனர்.

Get your business listed on our directory >>More Special article News

அதிகம் படித்தவை