உலகக்கோப்பை கால்பந்து போட்டி: மூன்றாவது இடத்தை பிடித்தது பெல்ஜியம்

Jul 15, 2018, 11:11 AM IST

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பெல்ஜியம் அணி வெற்றிப்பெற்றுள்ளது.

ரஷ்யாவில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் மூன்றாவது இடத்துக்கான போட்டி நேற்று பெல்ஜியம்-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

ஏற்கனவே, அரையிறுதி போட்டியில் வெற்றிப்பெற்று பிரான்ஸ், குரோஷியா ஆகிய இணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதனால், மூன்றாவது இடத்திற்கான போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில், அரையிறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பெல்ஜியம்&இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டியில், பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.

You'r reading உலகக்கோப்பை கால்பந்து போட்டி: மூன்றாவது இடத்தை பிடித்தது பெல்ஜியம் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை