இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றிருந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.
இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 403 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக டேவிட் மலன் (140), பைர்ஸ்டோ (119) ரன்கள் குவித்தனர். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியா ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 662 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
இதில் ஆஸ்திரேலியா கேப்டன் இரட்டைச் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது. அவர் 399 பந்துகளில் 239 ரன்கள் குவித்தார். அதேபோல் மற்றொரு வீரர் மார்ஷ் 181 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பின்னர், 259 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக வின்ஸ் 55 ரன்களும், டேவிட் மலன் 54 ரன்களும் எடுத்தனர்.
இதனால், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.