சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசையில் டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன்களில் விராட் கோலி முதலிடம் பெற்றுள்ளார்.
சமீபத்தில் இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. அந்தத் தோல்வியின் மத்தியிலும் ஓர் ஆறுதல் கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் முதல் இன்னிங்ஸில் 149, இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்களை பெற்ற கேப்டன் விராட் கோலி, ஐசிசி தரவரிசைப்பட்டியலில் டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
தற்போது தடையில் இருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திடமிருந்து, கோலி முதலிடத்தை தட்டிப் பறித்துள்ளார். 2011ம் ஆண்டு டெண்டுல்கர் இந்தப் பெருமையைப் பெற்றதற்குப் பின்னர் இப்போதுதான் இந்திய டெஸ்ட் வீரர் ஒருவர் ஐசிசி பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளார்.
934 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ள விராட் கோலி, டெண்டுல்கருடன் முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், வெங்சர்க்கார், டிராவிட், சேவாக், காம்பீர் ஆகியோரும் இந்தப் பெருமையை பெற்றுள்ளனர்.