ஐ.பி.எல் தொடர்... இனி ஐ.சி.சி அட்டவணையில் இணைகிறது.

Dec 20, 2017, 21:26 PM IST
இன்டியன் பிரீமியர் லீக் தொடர் என்பது ஏப்ரல் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாகும்.
இது இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ யால் நடத்தப்படும் தொடராகும், இதைப்போலவே உலகம் முழுவதும் பல நாடுகளில் பல்வேறு பெயர்களில் நடைபெற்று வருகிறது.
இதைப்போன்ற தொடர்களுக்கும் இண்டர்நேஷனல் கிரிக்கெட்  கவுன்சில் என்படும் ஐ.சி.சிக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதால், ஐ.பி.எல் போட்டி நடைபெறும் காலகட்டத்தில் ஐ.சி.சி போட்டிகளும் நடைபெற்று வருகிறது.
அதில் பங்கேற்க வரும்படி அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள், ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கும் அவர்களது நாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுக்கும், 
இதனால் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்களால் இங்கு முழு தொடரிலும் பங்கேற்க முடியாமல், பாதியிலேயே அவர்கள் தாயகம் திரும்பும் சூழல் நிலவியது.
இந்த வருடம் 14.5 கோடிக்கு ஏலம் போன இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக், தென் ஆப்பிரிக்காவின் ஹாசிம் ஆம்லா போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் திடீரென கிளம்பி சென்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நீடிப்பதால், ஐ.பி.எல் போட்டிகளில் சுவாரஸ்யம் குறைந்தும், அணிகளின் பலம் குறைந்தும் காணப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, ஐ.பி.எல் போட்டி அட்டவணையை ஐ.சி.சி யின் போட்டி அட்டவணையில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன
இந்நிலையில் அடுத்த 2019-ம் வருடம் முதல், ஐ.பி.எல் போட்டி அட்டவணை ஐ.சி.சி அட்டவணையில் சேர்க்ப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் 2019 முதல் 2023 வரையிலான காலங்களில், ஐ.சி.சி போட்டிகளின் அட்டவணை தயாரித்து வெளியிடும்போது, இனி ஐ.பி.எல் திருவிழா நடைபெறும் நாட்களில் ஐ.சி.சி போட்டிகள் நடைபெறாதவாறு புதிய அட்டவணை தயாரித்து வெளியிடப்படும்.
இதனால் இனிவரும் ஐ.பி.எல் போட்டிகளில் சுவாரஸ்யங்களுக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.

You'r reading ஐ.பி.எல் தொடர்... இனி ஐ.சி.சி அட்டவணையில் இணைகிறது. Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை