மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று துவங்கிய போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 364 ரன்கள் எடுத்திருந்தது. 2வது நாளான இன்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து அவர் சதம் அடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 184 பந்துகளில் விராட் கோலி சதம் அடித்தார். இதேபோல் அபாரமாக ஆடிய ரிஷப் பன்ட் 92 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 5 விக்கெட் இழப்புக்கு இந்தியா 475 ரன்கள் எடுத்து விளையாடுகிறது.
24வது சதத்தை பூர்த்தி செய்த கேப்டன் விராட் கோலி யாருடைய சாதனைகளை முறியடித்திருக்கிறார் என்று பார்ப்போம்
குறைந்த இன்னிங்ஸில் 24 சதங்களை விளாசிய வீரர்கள்:
- 66 இன்னிங்ஸ் - பிராட்மேன்
- 123 இன்னிங்ஸ் - விராட் கோலி
- 125 இன்னிங்ஸ் - சச்சின் டெண்டுல்கர்
- 128 இன்னிங்ஸ் - சுனில் கவாஸ்கர்
- 132 இன்னிங்ஸ் - மேத்திவ் ஹைடன்
- 135 இன்னிங்ஸ் - முகமது யூசஃப்
- 141 இன்னிங்ஸ் - கார்ஃபில்டு சோபர்ஸ்
கேப்டனாக அதிக சதம் அடித்த வீரர்:
- 25 - கிரீம் ஸ்மித்
- 19 - ரிக்கி பாண்டிங்
- 17 - விராட் கோலி
- 15 - ஆலன் பார்டர்/ ஸ்டீவ் வாக்/ ஸ்டீவ் ஸ்மித்
தற்போதுள்ள கேப்டன்களில் அதிக 100/50 பூர்த்தி செய்த வீரர் :
- 24/19 - விராட் கோலி
- 23/24 - ஸ்டீவ் ஸ்மித்
- 18/26 - கேன் வில்லியம்சன்
- 14/41 - ஜோ ரூட்
இப்படி அவரின் இந்த சதத்தால் கிரிக்கெட் அரசனாக மாறி வருகின்றார். கோலி இதுவரை 24 டெஸ்ட் சதம் கேப்டனாக 17 சதம் இந்த ஆண்டில் மட்டும் 4 சதம். 24 வது டெஸ்ட் சதத்தை வேகமாக அடித்த 2 வது வீரர் என்ற சாதனைகளைப் படைத்துள்ளார்.