ஃபாப் டு பிளெசிஸ் மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் அணிக்கு திரும்புகையில் அணித்தேர்வுக்கு சிக்கல் உள்ளது. அனைவரும் நல்ல பார்மில் இருக்கின்றனர். என்று தென் ஆப்பிரிக்கா அணியின் டெஸ்ட் கேப்டன் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்காவை அடைந்துள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 05ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள கேப்டன் டி வில்லியர்ஸ், “டு பிளெஸிஸ் அவருக்கு காயம் என்று கூறி அணிக்கு தலைமையேற்க என்னை அணுகிய போது இலேசான பயம் ஏற்பட்டது, ஆனால் கடைசியில் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்டேன். விக்கெட் கீப்பராகவும் செயல்பட வேண்டியிருந்தது, ஒரே சமயத்தில் எல்லாம் சேர்ந்து நடந்தது மகிழ்ச்சியே. பொறுப்பை எடுத்துக் கொள்வது எனக்கு பிடித்தமானது.
ஃபாப் டு பிளஸ்ஸிஸ் மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் அணிக்கு திரும்புகையில் அணித்தேர்வுக்கு சிக்கல் உள்ளது. அனைவரும் நல்ல பார்மில் இருக்கின்றனர். ஆனால், நல்லவேளையாக இது எனது பிரச்சனையல்ல. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
நான் நான்காம் நிலையில் களமிறக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கிறேன். இல்லையேல் குளிர்பானம் ஏந்தி வரத்தயார். டி காக் திடீரென காயமடைந்ததால் விக்கெட் கீப்பிங் பொறுப்பேற்றேன். என்னைப் பொறுத்தவரை நான் கீப்பிங் செய்ய விரும்பவில்லை. என் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்றார் தெரிவித்துள்ளார்.