வெற்றி பாதைக்கு திரும்புமா இந்தியா இன்று 4வது ஒரு நாள் போட்டி!

Today 4th one day match with WestIndies

by Mari S, Oct 29, 2018, 10:31 AM IST

மேற்கிந்திய அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இன்று நடைபெறும் 4வது போட்டியில் இந்தியா வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

சனியன்று புனேவில் நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியில், கேப்டன் கோலி மட்டும் சதம் விளாசி அணியை நல்ல ஸ்கோருக்கு உயர்த்தினார். மற்ற வீரர்கள் கோலியுடன் கைகோர்க்க தவறியதால், 283 என்ற இலக்கை சேஸ் செய்யமுடியாமல் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது.

டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய இந்திய அணி 5 ஒருநாள் போட்டி தொடரின், முதல் ஆட்டத்தை அபாரமாக வென்றது. அடுத்து 2வது ஒருநாள் போட்டியில் தங்களின் பலவீனத்தை சரிசெய்த மேற்கிந்திய அணி, ஆட்டத்தை டிரா செய்தது. மூன்றாவது போட்டியில், தங்களின் முழு பலத்தையும் வெளிப்படுத்தி வெற்றியை பறித்துள்ளது. இதனால் இரண்டு அணிகளும் 1-1 என்ற சம நிலையில் உள்ளனர். அடுத்து வரும் 2 போட்டிகளிலும் வெல்லும் அணியே தொடரை கைப்பற்றும் என்பதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இன்று மதியம் 1.30 மணிக்கு மும்பையில் உள்ள பார்போர்ன் ஸ்டேடியத்தில் 4வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இந்திய வீரர்கள் தங்களின் முழு பலத்தையும் வெளிப்படுத்தி மேற்கிந்திய அணியை வென்றால் தான் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் சதமடித்த கேப்டன் விராத் கோலி ஹாட்ரிக் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார். இன்றைய போட்டியிலும் கேப்டன் கோலி சதம் விளாசினால், இலங்கை வீரர் சங்ககராவின் சாதனையை கோலி முறியடித்து மீண்டும் ஒரு சாதனையை கோலி படைப்பார்.

ஆனால், கேப்டன் தனது சாதனைக்காக மட்டும் விளையாடக்கூடாது, அணியின் மற்ற வீரர்களையும் ஆட வைக்க வேண்டிய பணியும் கோலிக்கு உள்ளது. கோலிக்கு இன்றைய போட்டியிலாவது தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் வலுவான தொடக்கத்தை கொடுத்து அதிக ரன்களை சேர்க்க வேண்டும். அம்பத்தி ராயுடு, ரிஷப் பண்ட், தோனி போன்ற வீரர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

You'r reading வெற்றி பாதைக்கு திரும்புமா இந்தியா இன்று 4வது ஒரு நாள் போட்டி! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை