அமெரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டனாக, மும்பையைச் சேர்ந்த 27 வயதான சவுரப் நேத்ராவள்கேர் நியமிக்கப்பட்டுள்ளார், இவர் அமெரிக்காவில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார், 2015ம் ஆண்டுதான் இந்தியாவில் இருந்து அமெரிக்க சென்றார்.
இவர் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர், அமெரிக்காவில் நி கார்னல் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் கணினி அறிவியல் பட்டம் பெற்றுள்ளார், கல்லூரியில் படிக்கும் போது கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற சவுரப், ஆரக்கிள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த பின்னரும் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வந்தார்.
அவரின் கிரிக்கெட் ஆர்வத்தையும் அதற்காக தன்னை அர்ப்பணித்த விதத்தையும் கவனித்த தேர்வுக்குழு, கடந்த ஆண்டும் அமெரிக்க அணியில் விளையாட வாய்ப்பு வழங்கினார், அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட சவுரப் தற்போது அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த ஒருவர் அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை மட்டும் இல்லை இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.