சென்னை அணி மீண்டும் ஐ.பி.ல். தொடரில் இடம்பெற உள்ளது. சூதாட்டம் காரணமாக அந்த அணிக்கு விதிக்கப்பட்டிருந்த இரு ஆண்டுகள் தடை முடிவடைந்தது. சென்னை அணியின் முன்னாள் வீரர்கள் பலர் பூனே, குஜராத் அணிகளுக்காக விளையாடி வந்தனர். அந்த அணிகள் இனிமேல் ஐ.பி.எல் தொடரில் இடம் பெறாது. சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி உள்ளிட்ட வீரர்களை ஒப்பந்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அணியில் தோனி மீண்டும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோனி, இன்ஸ்டாமிராமில் தல 7 என்று எழுதப்பட்ட ஜெர்சியை அணிந்திருப்பது போல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதையடுத்து சென்னை அணியின் ரசிகர்கள் கடும் உற்சாகமடைந்துள்ளனர். தோனி, சென்னை அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளமிங் போன்றவர்களை எந்த விலை கொடுத்தாவது வாங்கி விட சென்னை அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.