எனக்கு நடந்ததே மிதாலி ராஜுக்கும் நடந்துள்ளது – கங்குலி காட்டம்!

same happened for mithaali raj said ganguly

Nov 27, 2018, 11:08 AM IST

பெண்கள் டி20 உலகக்கோப்பை போட்டியில் மிதாலி ராஜ் நீக்கப்பட்டது போல, தன்னையும் நீக்கியதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில், இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதில் பங்குபெற்ற இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்து வெளியேறியது.

இந்தப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான மிதாலி ராஜை அணியில் சேர்க்காதது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மிதாலியின் மேனேஜரும், "இந்திய கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவூரை கேப்டன் பதவிக்கு தகுதியற்றவர்" என்று விமர்சித்தார். இந்நிலையில், இந்திய ஆண்கள் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இது குறித்த தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.


"உலகின் தலைசிறந்தவர்கள் சில நேரங்களில் இதனை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் " என்று கூறினார். மேலும் "நான் கேப்டனாக இருந்து பின்னர் அணியில் வீரராக தொடர்ந்த போதும் இது இருந்தது. நான் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். இப்போது மிதாலியை பார்க்கும்போது, அதேதான் தோன்றுகிறது. வெல்கம் டு த குரூப் மிதாலி" என்று கூறியுள்ளார்.

‘மிதாலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள். வாய்ப்பு தானாக வரும். அதனால் மிதாலியின் நீக்கத்துக்கு நான் வருந்தவில்லை. ஆனால் இந்தியா இவ்வளவு தூரம் உலகக் கோப்பையில் தோற்காமல் வந்து, கோப்பையை நூலிழையில் தோற்றதுக்கு வருந்துகிறேன்" என்றும் கங்குலி கூறியுள்ளார்.

இந்திய கேப்டனாகவும் ஒருநாள் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேனாகவும் விளங்கிய கங்குலி, பின்னர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அணியில் வீரராக தொடர்ந்தார். அப்போது, 15 மாதங்கள் அணியில் இடம்பெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் அணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

தற்போது, கேப்டன் பதவியில் இல்லாமல் அணியில் தொடரும் தோனிக்கும், மிதாலி ராஜுக்கும் இதே நிலைமை தான் தொடர்கிறது.

You'r reading எனக்கு நடந்ததே மிதாலி ராஜுக்கும் நடந்துள்ளது – கங்குலி காட்டம்! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை