ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. முதல் போட்டி சிட்னியில் இன்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸி.கேப்டன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆஸி அணியின் கவாஜா (59), மார்ஷ் (54), ஹான்ட் ஸ்கோப் (73)ஸ்டான்ஸ் (47)என ரன்கள் குவிக்க 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது.289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி. தவான், ராயுடு டக் அவுட்டாகினர். கேப்டன் கோஹ்லியும் 3 ரன்களில் ஆட்டமிழக்க 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் தத்தளித்தது.
பின்னர் ரோகித் சர்மாவுடன் டோனி ஜோடி சேர இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டோனி 51 ரன்களில் ஆட்டமிழக்க இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. நிதானமாக ஆடிய ரோகித் கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட சதத்தை கடந்து 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க தோல்வி உறுதியானது. இறுதியில் 50 ஓவர்களில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் மட்டுமே எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.