ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராவதற்குப் பதில் வரும் 29-ந் தேதி ஆஜராகிறார்.
ஆணையத்தின் முன்பு நாளை 23-ந் தேதி ஓபிஎஸ் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் ஆஜராக அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வரும் 29-ந் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார்.
அவரிடம் 8 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், ஓ.பி.எஸ்.குறித்து பல்வேறு தகவல்களைக் கூறியிருந்தார். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த முழு தகவல்களும் ஓ பிஎஸ்சுக்கு தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்த நிலையில் ஓபிஎஸ் கால அவகாசம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்.பியுமான தம்பித்துரை விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.