தமிழகத்தின் பல இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இரவு முழுவதும் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போதிய வசதிகள் இல்லை என்று சமூக வலைதளங்களில் அபயக்குரல் விடுத்த சம்பவங்கள் பல இடங்களில் நடந்தது.
தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 4-வது நாளான நேற்று மாநிலம் முழுவதும் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். கைதானவர்களை திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், மைதானங்களில் என அடைத்து வைத்தனர். இப்படி கைதானவர்களை மாலையில் விடுவித்து விடுவது வழக்கமான ஒன்று.
ஆனால் நேற்று கெடுபிடியாக போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானது. இதையறிந்ததும் மறியலில் கைதாகி தங்க வைக்கப்பட்டிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அத்தனை பேரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைதானவர்களை விடுதலை செய்யும் வரை போராட்டம் என்று அறிவித்தவர்களுக்கு நேரம் செல்லச் செல்ல பல்வேறு சிக்கல்கள் .இரவாகி விட பல இடங்களில் மின் வசதி இல்ல.. லைட் எரியல.. குடிக்க தண்ணி இல்ல .. சாப்பாடு தரல ...என்ற புலம்பல்களை வாட்ஸ் அப், டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வளைதளங்களில் தட்டி விட்டனர். மீடியாக்களே எங்கள் அவல நிலையை வெளிப்படுத்துங்கள் உதவிக்கு அழைத்2 னர்.
பெண் ஊழியர்களோ உறவினர்களுக்கு செல்போனில் உதவி கேட்டனர். இதை விட கொடுமை தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் திருமண மண்டபத்தில் நடந்துள்ளது. நள்ளிரவில் லைட்டை அணைத்து விட்டு பெண் ஊழியர்களிடம் போலீசார் சிலர் சில்மிஷத்தில் ஈடுபட முயன்றதாகவும் வாட்ஸ் அப் மூலம் மற்ற ஊழியர்களுக்கும் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.