நிர்வாண நிலையில் யாகம் நடத்திய ஆந்திர சாமியார்! - தடுத்து நிறுத்திய திருவண்ணாமலை போலீஸ்

Advertisement

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நிர்வாண நிலையில் ரகசியமாக  மகா யாகம் நடத்திய விஷயம் வெளிவந்துள்ளது.

திருவண்ணாமலை சிவன் கோவில் கிரிவல பாதையில் மணக்குள விநாயகர் ஆலையம் எதிரே தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதை நடத்தியவர் ஆந்திரா பொங்குலகொண்டா கைலாயஸ்ரம பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சூர்ய பிரகாசநந்த சரஸ்வதி சாமியார். கடந்த இரண்டு நாட்களாக நிர்வாண நிலையில் அங்கு மகா யாகம் நடத்தி வந்துள்ளார். மொத்தம் 7 நாட்கள் யாகம் நடத்த சாமியார் திட்டமிட்டுள்ளார். இதற்காக 25 ஆயிரம் லிட்டர் எண்ணெய் கொண்டுவரபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயம் போலீசார் காதுகளுக்கு எட்ட சம்பவ இடத்துக்கு விரைந்து யாகத்தை தடுத்து நிறுத்தினர்.

யாரிடம் அனுமதி வாங்கி யாகம் நடத்தப்பட்டது என்று போலீசார் கேட்டதற்கு பதில் கூறாமல் ஆந்திர சாமியார் ரூமுக்குள் சென்றுவிட்டார். ஆனால் சாமியருடன் இருந்தவர்கள் போலீசுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். எங்களுக்கு துணை ஜனாதிபதி வரை ஆள் இருக்கிறது என்று அப்போது போலீஸை மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில், உலக நன்மைக்காக வேண்டி இந்தியா முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் யாகம் நடத்தியாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் திருவண்ணாமலை கோவில் வட்டாரத்தில் சிறிது நேரம் பரபரப்பாக பேசப்பட்டது.

 

 

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>