லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ‘டாட்டா’ காட்டும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களது அணிக்கு நிச்சயம் வந்துவிடும் என மகிழ்ச்சியுடன் இருக்கிறாராம் அமமுக துணை பொதுச்செயலர் தினகரன்.
லோக்சபா தேர்தலில் திமுக தலைமையில் வலுவான அணி அமைந்துவிட கூடாது என்பது பாஜகவின் கணக்கு. இதனால் அமமுக, அதிமுகவை இணைக்க படாதபாடு பட்டு கொண்டிருக்கிறது பாஜக.
ஆனால் அதிமுக தரப்பில் தினகரனை சேர்த்துகொள்ளமாட்டோம் என உறுதியாக சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் தமது தலைமையில் வலுவான ஒரு அணி அமைக்க முயற்சித்தார் தினகரன்.
இந்த முயற்சிக்கு துணையாக இருந்ததால் திருநாவுக்கரசரின் கட்சித் தலைவர் பதவி காலியானது. இதனால் தினகரனுக்கான காங்கிரஸ் கதவுகள் மூடப்பட்டுவிட்டது.
அதேநேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டு பாமகவை உள்ளே இழுக்க வேண்டும் என வடமாவட்ட திமுக சீனியர்கள் போராடி வருகின்றனர். இதையே மாவட்ட செயலாளர்கள் பலரும் வலியுறுத்துகின்றனர்.
இதனால் திமுக அணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் வெளியேறும் என்றே தெரிகிறது. அப்படி விடுதலை சிறுத்தைகள் வெளியேறினால், நிச்சயம் தினகரனுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் தினகரன் தரப்பு மகிழ்ச்சியில் இருக்கிறதாம்.