தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் கனிமொழி பங்கேற்ற ஊராட்சி சபை கூட்டங்களில் அமோக ஆதரவு கிடைத்ததை ரசிக்காத ஸ்டாலினின் கிச்சன் கேபினெட் உதயநிதியை அங்கு அனுப்பி வைத்திருப்பது திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி முடிவு செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இதற்கான பணிகளையும் கனிமொழி செய்து வருகிறார்.
இதனால் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி சபை கூட்டங்களில் கனிமொழி மட்டும் பங்கேற்று வந்தார். அவருக்கு திமுக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பை கொடுத்தும் வந்த்னர்.
இந்த ஊராட்சி சபை கூட்டங்களில் கனிமொழிக்கு அமோக ஆதரவை மக்கள் வெளிப்படுத்தினர். இதனால் தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்பட்டு வந்தது.
இதனால்தான் அதிமுக தரப்பில் நடிகை ராதிகாவை களம் இறக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனிமொழி வெற்றி பெறக் கூடாது என துடிக்கும் ஸ்டாலின் கிச்சன் கேபினெட் திடீரென உதயநிதியை ஊராட்சி சபை கூட்டங்களுக்கு அனுப்பியது.
இதை கண்டுகொள்ளாமல்தான் கனிமொழி தரப்பு இருந்தது. ஆனால் ஆட்டை கடித்து மனுசனை கடிப்பது போல, தற்போது தூத்துக்குடி ஊராட்சி சபை கூட்டங்களில் உதயநிதியும் பங்கேற்கிறார். இது கனிமொழி தரப்பை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஸ்டாலின் கிச்சன் கேபினெட்டை பொறுத்தவரையில் திமுக என்றால் தங்களது குடும்பம் மட்டும்தான் என்கிற நிலையை உருவாக்க போராடுகிறது. இந்த வியூகத்தை உடைத்து எறிவாரா கனிமொழி? என்பதுதான் திமுகவின் தற்போதைய விவாதம்.