லண்டன் பக்கிங்காம் அரண்மனை விருந்தில் பங்கேற்ற முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு வாழ்த்து

பக்கிங்காம் அரண்மனை விருந்தில் பங்கேற்ற முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு லண்டன் எம்.ஜிஆர். பேரவை நிர்வாகி டாக்டர் செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செளந்தரராஜன், சைதை துரைசாமிக்கு அனுப்பியுள்ள கடிதம்:

இந்திய தாய்த்திரு நாட்டை ஆட்சி புரிந்த பிரித்தானிய இளவரசியின் பக்கிங்காம் அரண்மனையின் அழைப்பும் விருந்தும் தங்களின் சேவைக்காய் கிடைத்த பாராட்டு-எம் செவிகளுக்கு இனிமைச் சேர்க்கும் தாலாட்டு. ஆம்! எண்ணிப்பார்க்க முடியாத மகிழ்ச்சியில் - என் இதயம் பூரிப்படைகிறது! தங்களை நட்சத்திர விடுதியில் தங்க வைத்து பாரம்பரிய ஆடையாம் வேட்டி, சட்டை அணிந்து தங்களின் புதல்வன் 'வெற்றியுடன்' விலை உயர்ந்த ரோல்ஸ்ராய்ஸ் வாகனத்தில் அழைத்துச் சென்ற காட்சியை அருகிலிருந்து பார்த்து ரசித்த நான் பரவசமடைந்து போனேன்!

ஓங்கி உயர்ந்த அரண்மனையின் ஒளிர்விடும் வெளிச்சத்தில் உல்லாசமாய் நடைபயின்று -சேவை எனும் சிறப்பின் மூலம் பக்கிங்காம் அரண்மனையில் காலடி வைத்து விருந்தோம்பலுக்கு விடையம் கற்பித்த வினோத மனிதன் அண்ணன் சைதையாரே! உலக வல்லரசின் அரண்மனை விருந்தில் பங்குபெறுவது அனைவருக்கும் கிடைக்கின்ற வாய்ப்பல்ல.

உம் சேவையால் கிடைத்த அரிய வாய்ப்பு. ஆம்! உமக்கு பெருமை!உமையீன்ற தாய் தந்தையருக்குப் பெருமை!

உமை தமிழகத்தின் மேயராக்கிய சென்னை மாநகர மக்களுக்குப் பெருமை! உமை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த சைதை மக்களுக்குப் பெருமை!

ஏன்? ஒட்டுமொத்த இந்திய திருநாட்டிற்கே பெருமை! சேவையாலும் கொடை தன்மையாலும் உயர்ந்த மனிதப்புனிதன் MGR க்கு புகழ் சேர்த்த உன்னதத் தொண்டரே! உம்மை ஊர் போற்றட்டும்!

உங்களின் சேவையை தாய்திரு நாடு போற்றட்டும்! இவ்வுலகம் போற்றட்டும்! சென்னைப் பட்டிணமே சிறப்பு சேர்க்கட்டும்! இதய தெய்வத்தின் இதயங்கள் போற்றட்டும்!

சைதை எனும் அடை மொழியால் தங்களின்"சேவை" சரித்திரம் படைக்கட்டும். 05/02/19 மறக்க முடியாத அன்றைய நாள்! இரவு நிகழ்ச்சிக்குப்பின் தங்களுடன் தொலைபேசியில் நிகழ்ச்சி பற்றி கேட்ட போது, தாங்கள் சொன்ன அந்த செய்திகள் எனக்கு பெரிய மகிழ்ச்சியினை தந்தது.

இளவரசர் சார்லஸ் அவர்கள் உங்களுடனும் வெற்றியுடனும் சில நிமிடங்களுக்கு மேல் பேசிய நிகழ்வு என் உள்ளத்தில் பெரும் மகிழ்ச்சியை உருவாக்கியது! இவையெல்லம் தங்கள் சேவையின் அடையாளத்திற்க்கானது. ஆம்! தங்கள் வாழ்க்கையின் ஒரு பெரிய வரலாற்றுப் பதிவு இது.

மேலும் இப்படி ஒரு பெரும் புகழை, பெருமைக்குரிய நிகழ்வை இப் பிரித்தானிய மண்ணில் விதைத்துவிட்டு சென்றிருக்கின்ற தங்களை, புரட்சித்தலைவர் MGR ன் தொண்டன் என்கின்ற முறையில் இருகரங்கள் கூப்பி வணங்கி வழியனுப்பி வைக்கின்றேன். இவண் Dr. வி. சௌந்திரராஜன் லண்டன் MGR பேரவை, குறைடன்

இவ்வாறு Dr. வி. சௌந்திரராஜன் வாழ்த்தியுள்ளார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News