கேப்டன் டூ சிப்பந்தி.. விஜயகாந்தை தாறுமாறாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை ட்விட்டர் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

லோக்சபா தேர்தல் கூட்டணி விவகாரத்தில் தேமுதிகவின் நிலை கேலிப் பொருளாகிப் போனது. தற்போது வேறுவழியே இல்லாமல் 4 தொகுதிகளுடன் அதிமுக கூட்டணியில் ஒட்டிக் கொண்டிருக்கிறது தேமுதிக.

தேமுதிக நடத்திய பேரங்கள் அக்கட்சியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியது. இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பதிவிட்ட ட்வீட் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது.

ட்வீட்:

கேப்டனாக இருந்து
சிப்பாயாய் மாறி
சிப்பந்தியாய் மாறி
சின்னாபின்னமானவர்தான்
நம்ம விஜயகாந்த்

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்