முதல்வர் சீட்டுக்காக சசிகலா காலில் `விழுந்து தவழ்ந்த’ ஈபிஎஸ் –ஸ்டாலின் ‘அடாக்’

‘விறுவிறு சுறுசுறு’ எனத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. பலத்தை நிரூபிக்க அதிமுகவும் திமுகவும் மும்மரமாக செயல்படுகிறது. அதோடு, தங்களுக்கு ஒதுக்கப்படத் தொகுதியில் வெற்றி பெற சுழன்று வருகின்றனர் திமுக, அதிமுக கூட்டணியினர்.

பெரம்பலூர், பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய, திமுக தலைவர் ஸ்டாலின், மத்தியில் பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதோடு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், ‘மக்களைப் பற்றி மத்திய அரசும், மாநில அரசும் கவலை படவில்லை. தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய நிலையில் தான் ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

எடப்பாடியைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. முதல்வராக வேண்டும் என்ற சசிகலாவின் எண்ணம் நிறைவேறாமல் போகவே, சசிகலா காலில் விழுந்து தவழ்ந்து இடத்தைப் பிடித்தார் எடப்பாடி. தவழ்ந்து தவழ்ந்து முதல்வர் பதவியில் அமர்ந்தார் ஈபிஎஸ். தற்போது, மீண்டும் தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள மோடியின் கைகளைக் கால்களாகக் கருதி ஜால்ரா போட்டுக் கொண்டிருப்பவர் ஈபிஎஸ், என அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார். 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்