ஆட்சியாளர்கள் திருடும் பணத்தை மிச்சப்படுத்தினால் இரண்டு தமிழ்நாட்டை செழிப்பாக முடியும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால் பிரசார களம் அனல் பறக்கிறது. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ராமதாஸ், டிடிவி தினகரன், சீமான் என முக்கிய அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்த வரிசையில், மக்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
திருவண்ணாமலை மற்றும் ஆரணியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஷாஜியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார் கமல்ஹாசன். அப்போது, பேசிய அவர், ‘ஆரணியில் அரசு கல்லூரி இல்லை. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, அனைவரும் வேடிக்கை பார்க்கிறார்கள்’ எனத் தமிழக அரசின் மீதும், திமுக மீதும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய கமல், ‘ஆட்சியாளர்கள் திருடும் பணத்தை மிச்சப்படுத்தினால், இரண்டு தமிழ்நாட்டை செழிப்பாக முடியும். இதே ஆட்சி தொடர்ந்தால் இன்னும் இரண்டு தலைமுறைக்கு எந்த பயனுமில்லை’ எனக் கூறினார்.