மதுவிலக்கு சாத்தியமானால்.,மாஃபியாக்கள் பெருகுவார்கள்! -சொல்கிறார் கமல்

kamalhassan talks about prohibition

by Suganya P, Apr 12, 2019, 11:00 AM IST

பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தால் கள்ளச்சாராய மாஃபியாக்கள் பெருகி விடுவார்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தேர்தலையொட்டி, தன் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் கமல், ‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும்; இளைய தலைமுறை சமூகம் மாற்றத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என பிரசாத்தில் குறிப்பிட்டு பேசி வருகிறார்.

இந்நிலையில், நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் குருவையாவை ஆதரித்து கமல் பிரசாரம் செய்தார். அப்போது, பேசிய கமல், ‘பூரண மதுவிலக்கைக் கொண்டு வந்த எந்த இடமும் ஒரு மாஃபியாக்களை உருவாக்காமல் போனதில்லை. கோட்டையில் இருப்பவர்கள் கள்ளச்சாராய மாஃபியாக்களாக மாறிவிடுவார்கள். பின், அவர்களைத் திருத்த முடியாது. மது வேண்டாம் என்று மக்கள் முடிவெடுத்தால் மட்டுமே புராண மதுவிலக்கு சாத்தியமாகும்’ என்று பேசினார்.  

You'r reading மதுவிலக்கு சாத்தியமானால்.,மாஃபியாக்கள் பெருகுவார்கள்! -சொல்கிறார் கமல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை