மதுரை அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரை காவு வாங்கிய மின்வெட்டு இதுக்கென்ன சொல்றீங்க சிஎம் எடப்பாடி?

மதுரை அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னையே இல்லை என மேடைக்கு மேடை வீதிக்கு வீதி பிரசாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுக்கென்ன பதில் சொல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக ஐசியுவில் இருந்த 5 நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெண்டிலேட்டருக்கு போகும் மின் சப்ளை திடீரென ஏற்பட்ட மின்வெட்டு காரணத்தால் கட் ஆனதால், இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெப்ப சலனம் காரணமாக நேற்று மாலை திடீரென தமிழகத்தின் பல பகுதிகளில் வானிலை மாற்றம் ஏற்பட்டது. மதுரையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததன் காரணமாக மதுரை சுற்று வட்டாரப் பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின் வெட்டு ஏற்பட்டது.

மதுரை அரசு மருத்துவமனையிலும் மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 15க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

அப்போது, மேலூர் பூஞ்சுத்தி கிராமத்தை சேர்ந்த மல்லிகா (55), திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனியம்மாள் (60), விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவீந்திரன் (52) ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து 5 நிமிடங்களில் உயிரிழந்தனர். மேலும் இருவர் சிறிது நேரம் கழித்து மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தனர்.

ஜெனரேட்டர்கள் மூலம் உடனடியாக வெண்டிலேட்டரை மருத்துவமனை இயக்காததே இதற்கு காரணம் என உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தார் வாக்குவாதம் நடத்தினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த மதுரை துணை கமிஷனர் சசி மோகன், மருத்துவமனை டீன் வனிதாவிடம் விசாரணை நடத்தியபோது, உடனடியாக தாங்கள் பேட்டரிகளை மாற்றிவிட்டோம் என்றும் மின் தடையால் நோயாளிகள் உயிரிழக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில் உயிருக்கு போராடி பலனில்லாமல் இங்கு வந்து சேர்ந்தவர்கள் தான் இறந்திருக்கிறார் எனக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொழிலாளர்களுக்கு திமுக தான் பாதுகாவலன்..! மே 23-க்குப் பிறகு விடிவுகாலம் பிறக்கும்..! மே தின விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!