கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் நடந்த சிறப்பு யாகத்தில் கலந்து கொள்வதற்காக ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணராவ் வந்திருந்தார். அங்கு அவர் அளித்த பேட்டியில், அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக, ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த யாகத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
பின்னர் ரஜினியின் அரசியல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், ரஜினி கட்சி துவங்குவதும், முதல்வராக வருவதும் தெய்வத்தின் செயல் எனவும் யார் கையிலும் அது இல்லை எனவும் சத்தியநாராயணராவ் தெரிவித்தார். மேலும், தனது தம்பி ரஜினி அரசியலுக்கு வந்து நல்லது செய்யட்டும் என்றும் கூறினார்.
இதனிடையே தண்ணீர் பஞ்சம் தொடர்பாகவும், காவிரி பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சத்தியநாராயணராவ், கர்நாடக அணைகளிலும் போதிய தண்ணீர் இல்லை, அங்கும் 3 நாள்களுக்கு ஒரு முறை வண்டிகளில் தான் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதாகவும் விளக்கம் கொடுத்தார்.
-தமிழ்