உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் புதுக்கோட்டையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் பத்தாயிரம் பேர் வரை பங்கேற்றனர்.
புதுக்கோட்டையில் இன்று(ஆக.17) காலை நடந்த மாரத்தான் ஓட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என்று சுமார் 10 ஆயிரம் பேர் இதில் பங்கேற்றனர்.
பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை கலெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் ஏராளமானோர் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஆசிய சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி 13 நாள் வெளிநாடுகளுக்கு பயணம்;