காவிரி நதிநீர் பிரச்னை தீர்ப்பு எதிரொலி: தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தம்

Feb 16, 2018, 08:17 AM IST

சென்னை: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருப்பதால் தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் அனத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழகம்&கர்நாடகா இடையே காவிரி பிரச்னை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றம் அறிவிக்கப்பட உள்ளது.

தீர்ப்பு வெளியான பிறகு, இரண்டு மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருக்கு செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேலூரில் இருந்து புறப்பட்டு ஓசூர் வழியாக கர்நாடகம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் வேலூரிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

பேருந்துகள் பாதிலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும், மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல் துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளனர்.

You'r reading காவிரி நதிநீர் பிரச்னை தீர்ப்பு எதிரொலி: தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை