16 அமெரிக்க நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.2,780 கோடி முதலீடு தயார்..

16 u.s. companies signed m.o.u for investing Rs.2780 crores in tamilnadu

by எஸ். எம். கணபதி, Sep 4, 2019, 13:12 PM IST

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு 16 அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தங்களின் மூலம், ரூ.2,780 கோடி வெளிநாட்டு முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா நாடகளுக்கு சுற்றுப்பயணம் மேற்ெகாண்டுள்ளார். லண்டனில் தனது பயணத்தை முடித்து கொண்ட அவர், நியூயார்க் வந்து சேர்ந்தார்.

அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்றார். அதில், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் பற்றி விளக்கும் வீடியோ பட விளக்கக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

தமிழகத்தில் ஏற்கனவே தொழில் நடத்தி வரும் கேட்டர் பில்லர், போர்டு நிறுவனங்களின் அதிகாரிகள் உள்பட 200க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். அவர்களுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு அளிக்கப்படும் அரசு சலுகைகள், சாதகமான சூழ்நிலைகள் குறித்து விளக்கப்பட்டது.

இதையடுத்து, ஜீன் மார்ட்டின் சிட்டஸ் பார்ம், ஜோகோ ஹெல்த், எமர்சன் உள்பட 16 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்நிறுவனங்கள், மொத்தம் ரூ.2,780 கோடி முதலீடு செய்து தமிழகத்தில் தொழிற்சாலைகளை அமைக்கும். இந்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

More Tamilnadu News


அண்மைய செய்திகள்