அரசு அனுமதி மறுப்பு எதிரொலி: அப்துல் கலாம் பள்ளிக்கு செல்லும் முடிவை ரத்து செய்தார் கமல்

Feb 21, 2018, 08:17 AM IST

ராமநாதபுரம்: அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு செல்லும் திட்டத்தை ரத்து செய்துள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

அரசியலில் தீவிரமாக குதித்துள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் பயணத்தை மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தொடங்குவதாக அறிவித்திருந்தார். மேலும், அப்துல் கலாம் படித்த பள்ளிக்கும் சென்று பார்வையிட இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு கமல் செல்ல பல்வேறு அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பின்னர், இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். அரசியல் நோக்கத்தோடு பள்ளிக்கு வருவதாக புகார்கள் குவிந்ததால் மாவட்ட கல்வித்துறை கமலுக்கு அனுமதி மறுத்தது.

இந்நிலையில், தனது அரசியல் பயணதிட்டத்தில் அப்துல் கலாம் பள்ளிக்கு சென்று பார்வையிடும் முடிவை கமல்ஹாசன் ரத்து செய்து அறிவித்துள்ளார்.

You'r reading அரசு அனுமதி மறுப்பு எதிரொலி: அப்துல் கலாம் பள்ளிக்கு செல்லும் முடிவை ரத்து செய்தார் கமல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை