கோவிலை சுற்றும்போது 3,500 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி!

முசிறி அருகேயுள்ள சஞ்சீவி பெருமாள் மலைக் கோவிலில், 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் பிராகாரத்தை சுற்றிவர முயன்ற இளைஞர், கீழே தவறி விழுந்து பலியாகியுள்ளார்.

Young death by fell down

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தா.பேட்டையில் சஞ்சீவி பெருமாள் மலைக்கோவில் உள்ளது. கோவில் பிராகத்தை சுற்றிவர பொதுமக்கல் மலை உச்சியில் ஆபத்தான நிலையில் இருக்கும் பாறையை பிடித்து வலம் வருவது வழக்கம்.

ஆபத்து நிறைந்த இப்பகுதியில் பொதுமக்கள் சென்றுவர வேண்டாம் என்று காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்து பலகை வைத்துள்ளது. ஆனாலும், பொதுமக்கள் அவ்வாறே தொடர்ந்து சுற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் வாலிபர் ஒருவர் கோவில் பிரகாரத்தை சுற்றி வர முயன்றுள்ளார். ஆனால், எச்சரிக்கையுடன் செல்லாததால் அந்த வாலிபர் மேலிருந்து கீழே தவறி விழுந்தார்.