36 வயதிலும் மின்னல் வேகத்தில் ரன் எடுக்கும் தல தோனி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கவுகாத்தியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியின் போது இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி ரன் எடுக்கும் வேகம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Oct 15, 2017, 11:32 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கவுகாத்தியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியின் போது இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி ரன் எடுக்கும் வேகம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Dhoni run

இந்திய அணியின் மகேந்திர சிங் தோனி வெற்றிகரமான கேப்டன், ஆட்டத்தை சிறப்பாக முடிக்கும் ‘ஃபினிஷர்’, அற்புதமான விக்கெட் கீப்பர், சிறந்த ஃபீல்டர் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால், 36 வயதிலும் அவரது ரன் எடுக்கும் வேகம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உடல் கட்டுப்பாட்டில் அதிக கவனம் மகேந்திர சிங் தோனியின் ஸ்டெம்பிங் செய்யும் வேகம் அசாத்தியமானது.

அந்த வேகத்தில் தான் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் முஷ்பிஹூர் ரஹ்மானை ஆட்டம் இழக்கச் செய்து இந்திய அணியை அறை இறுதிக்கு அழைத்துச் சென்றார். மேலும், அவர் எப்போதும் ஒரு ரன்கள் மட்டும் எடுக்க முடிந்த பந்துகளை கூட, இரண்டு ரன்களாக மாற்றக்கூடியவர்.

வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும்:-

இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. அப்போது இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி பந்தை இடது பக்கத்தில் தட்டிவிட்டு ரன் எடுக்க ஓடினார்.
மீண்டும் இரண்டாவது ரன் எடுக்க ஓடுகையில், மணிக்கு 35 கி.மீ வேகத்தில் ஓடியுள்ளார். ஆனால், எதிர் முனையில் ஓடிக்கொண்டிருந்த 32 வயதான கேதர் ஜாதவ் 25 கி.மீ. வேகத்தில் தான் ஓடினார். 36 வயதிலும் அசராத தோனியின் வேகம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

You'r reading 36 வயதிலும் மின்னல் வேகத்தில் ரன் எடுக்கும் தல தோனி Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை