பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 11 ல் கடந்த 2014 ம் ஆண்டு " முன்மாதிரி கிராம வளர்ச்சி திட்டம் " "Sanad Adarsh Gram Yojana " சுருக்கமாக SAGY எனும் திட்டத்தை நடைமுறை படுத்தினார். இது ஒரு ஊரக வளர்ச்சி திட்டம் இதன் நோக்கம் கிராமங்களை சமூக மற்றும் கலாச்சார அடிப்படையில் முன்னேற்றுவது மற்றும் மக்களிடையே சமூக நகர்வுகள் சார்ந்த செயல்களை முன்னெடுப்பது போன்றவைகளாகும்.
திட்டத்தின் நோக்கங்கள்
மத்திய , மாநில அரசுகள் அளிக்கும் திட்டத்தை கிராமப்புற மக்களிடையே கொண்டு சேர்த்து தகுதியான பயனாளிகளை உருவாக்க வகுக்கப்படும் திட்டங்களை நடைமுறைபடுத்த பயன்படும் கிராமங்கள் " முன்மாதிரி கிராமங்கள்" " ADARSH GRAM " எனப்படும் .
2.கிராம முன்னேற்றத்திற்கான மாதிரிகளை உருவாக்குதல் பின்னர் அதனையே மற்ற கிராமங்களுக்கு நடைமுறை படுத்துதல்.
திட்ட வழிமுறைகள்
ஒவ்வொரு மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அவர்கள் சார்ந்த தொகுதியில் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த கிராமம் அவரின் சொந்த கிராமமாக மற்றும் நெருங்கிய குடும்ப உறவினர்கள் சார்ந்த கிராமமாக இருத்தல் கூடாது.
அவர் அந்த கிராமத்தை அனைத்து வகையிலும் உதாரணமாக உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட முன்னேற்ற திட்டங்களை வகுக்க வேண்டும் அதனை அந்த கிராம அளவிலிருந்து முன்னேற்ற வேண்டும் பின்னர் அதனையே மற்ற கிராமங்களுக்கு நடைமுறைபடுத்த வேண்டும்.
பின்னர் அவரவர் மீண்டும் இரண்டு அல்லது மூன்று கிராமங்களை தேர்ந்தெடுத்த இம்மாதிரியான திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் இதுவே திட்டத்தின் நோக்கம் .
நிதி ஆதாரங்கள்
இந்த திட்டத்திற்கென தனியாக எவ்விதமான நிதியையும் அரசு ஒதுக்கவில்லை ஆனால் ஏற்கெனவே இருக்கும் திட்டத்தினை திறம்பட செயல்முறை படுத்தவே இந்த திட்டம் (SAGY ).
மேலும் நிதி தேவைப்படும் போது
1. உறுப்பினர்களின் தொகுதி நிதி
2.பிரதம மந்திரி கிராம சதக் யோஜானா திட்ட நிதி
3. இந்திய ஆவாஸ் யோஜானா நிதி
4. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதி
5.பிற்படுத்தப்பட்ட பிராந்தியங்களுக்கான நிதி
6.கிராமத்தின் மூலம் வரும் வருவாய்
7.தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு
போன்றவற்றின் மூலம் திட்டத்தை செயல்படுத்தலாம் .
இத்திட்டத்தினை தேசிய அளவில் மத்திய, மாநில உறுப்பினர்கள் மூலமாகவும்,மாநில அளவில் முதன்மை செயளாலர் மூலமாகவும்,மாவட்ட அளவில் ஆட்சியர் மூலமாகவும்,கிராம அளவில் கிராம பஞ்சாயத்து மூலமாகவும் மேற்பார்வையிடலாம் .
இந்த பிரதமரின் முன்மாதிரி கிராம வளர்ச்சி திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த கிராமங்களில் 96% திட்ட பணிகளை நிறைவேற்றி தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மேலும் முறையே உத்திரபிரதேசம் (88%) , மகாராஷ்டிரா (44%) அடுத்தடுத்த இடத்தில் உள்ளது .