செங்கல்பட்டு, கோவை சேலம் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா..

corona cases still rising in covai, salem districts.

by எஸ். எம். கணபதி, Sep 3, 2020, 09:05 AM IST

செங்கல்பட்டு, கோவை, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டங்களில் தினமும் 300, 400 பேருக்குத் தொற்று கண்டறியப்படுகிறது. தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ், ரயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. பள்ளி கல்லூரிகள் மற்றும் தியேட்டர்கள் உள்ளிட்ட சிலவற்றைத் தவிர அனைத்துமே திறந்து விடப்பட்டுள்ளது. ஆறு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. தினமும் புதிதாக 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது.

மாநிலம் முழுவதும் நேற்று(செப்.2) 5990 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 38,959 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5891 பேரையும் சேர்த்தால், இது வரை 3 லட்சத்து 80,063 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 98 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 7516 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 52 ஆயிரத்து 380 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில் தொடர்ந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று 1025 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 37,312 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 390 பேருக்கும், கோவையில் 579 பேருக்கும், சேலத்தில் 402 பேருக்கும், திருவள்ளூரில் 285 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. இந்த மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைபவர்கள் அதிகமானாலும், புதிதாகத் தொற்று பரவுவதும் நீடித்து வருகிறது.
மாநிலம் முழுவதும் இது வரை 49 லட்சத்து 99 ஆயிரத்து 905 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 73 ஆயிரத்து 883 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading செங்கல்பட்டு, கோவை சேலம் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை