மணல் கடத்தல் : தனியார் டிவி நிருபர் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது.

Sand smuggling: 4 arrested, including private TV channel reporter

by Balaji, Oct 15, 2020, 15:58 PM IST

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மணல் திருட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வந்தது. இதில் விதிமுறைகளை மீறி மணல் கடத்தியதாகப் பொட்டல் ராஜா நகரைச் சேர்ந்த ஜான் பீட்டர்(29), ஆத்தியப்பா(27), பால்ராஜ் (35), சேரன் மகாதேவியைச் சேர்ந்த மாரியப்பன் (25), ஆகிய நான்கு நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . இதில் ஜான்பீட்டர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிருபராக உள்ளார்.

மேலும் இவர்கள் நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் நால்வரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார் இதைத்தொடர்ந்து குண்டர் தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அளித்துள்ளார்.

You'r reading மணல் கடத்தல் : தனியார் டிவி நிருபர் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது. Originally posted on The Subeditor Tamil

More Tirunelveli News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை