மதுரை தீ விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் பலி: ஜவுளிக்கடை நிர்வாகம் மீது வழக்குப்பதிவு

மதுரை ஜவுளிக்கடை தீ விபத்தில் சிக்கி இரு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஜவுளிக்கடை நிர்வாகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

by Balaji, Nov 15, 2020, 13:11 PM IST

மதுரை தெற்கு மாசி வீதியில் பாபுலால் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்தது. இதை தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் அங்க வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாககட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி, கல்யாணகுமார், சின்னகருப்பு ஆகிய நான்கு தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மதுரை பெரியார் பேருந்து நிலைய தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் தெற்கு வாசல் போலீசார் ஜவுளிக்கடை நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜவுளிக்கடைக்கடை நடத்த முறையான அனுமதி உள்ளதா, கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து உள்ளூர் திட்ட குழுமம் மூலம் தடையில்லா சான்று முறையாக பெறப்பட்டுள்ளதா, தீ தடுப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா, விதிமுறை மீறல் ஏதேனும் உள்ளதா உள்ளிட்டவைகள் குறித்து ஜவுளிக்கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விதிமுறை மீறல்கள் இருக்கும் பட்சத்தில் உரிமையாளர் மேலாளர் உள்ளிட்ட சிலரும் வழக்கில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். .

You'r reading மதுரை தீ விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் பலி: ஜவுளிக்கடை நிர்வாகம் மீது வழக்குப்பதிவு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை