10 மில்லியன் கடந்த தளபதியின் மாஸ்டர்.. படம் ரிலீஸ் எப்போது..?

by Chandru, Nov 15, 2020, 12:47 PM IST

தளபதி விஜய் நடித்திருக்கும் புதிய படம் மாஸ்டர். இப்படத்தை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்திருந்தனர். கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது. இதற்கிடையில் இப்படம் ஒடிடியில் வெளியாக விருப்ப தாக நெட்டில் தகவல்கள் அவ்வப்போது பரவியது. ஒவ்வொரு முறையும் அது மறுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 7 மாதங் களுக்கு பிறகு சமீபத் தில் தியேட்டர் திறக்கப்பட்டதால் தீபாவளி தினத்தில் படம் திரைக்கு வரும் என்று எதிர் பார்க்கப் பட்டது. தியேட்டர்கள் திறப்ப தில் சிக்கில் ஏற்பட்டது.

தியேட்டர் அதிபர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடை யே விபிஎப் கட்டணம் செலுத் துவது தொடர்பாக பிரச்னை எழுந்தது. பல தரப்பு பேச்சு நடந்தும் இதில் சுமூக முடிவு ஏற்படவில்லை. விபிஎப் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்தால்தான் புதிய படங்கள் வெளியிடப்படும் என்று அறிவித்தனர். இந்நிலையில் 4 வாரங்களுக்கு விபிஎப் கட்டணம், கிடை யாது என்று சில டிஜிட்டல் நிறுவனம் அறிவித்தன. இதனால் பிஸ்கோத், இரண்டாம் குத்து போன்ற சில படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த பிரச்னைகளால் மாஸ்டர் ரிலீஸ் பற்றி தகவல் அறிவிக் காமல் பட தரப்பு மவுனம் காக்கிறது.

இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியிட்ட வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர். அவர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக தீபாவளி தினமான நேற்று டீசர் வெளி யானது.

இப்படத்தை லோகேஷ் கனக ராஜ் இயக்கி உள்ளார். அனிரூத் இசை அமைத்திருக் கிறார். விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோ யினாக நடித்திருக்கிறார். டீஸரில் விஜய்யின் அதிரடி யான சண்டை காட்சிகள் அசர வைத்துள்ளன. மாணவர்க ளுடன் இணைந்து ரவுடிகள் கூட்டத்தை விஜய் தாக்கும் பரபரப்பு காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த டீஸர் வெளியானதிலிருந்து ரசிகர் களின் ஏகோபித்த ஆதரவை பெற்று யூடியூபில் 10 மில்லி யன் வியூஸ் தாண்டி இருக்கிறது.

மாஸ்டர் டிரெய்லர் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது. பொங்கல் தினத்தில் தியேட்டர்களின் நிலைமை சீரடைந்தால் பொங்கலுக்கு வெளிவர வாய்ப்பிருக்கிறது. அல்லது பட ரிலீஸ் இன்னும், தள்ளிப்போகும் என்று தெரிகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை