10 மாதங்களுக்குப் பிறகு 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கு இன்று நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது . இதேபோல் கல்லூரிகளிலும் அனைத்து பிரிவு வகுப்புகளும் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளன.கொரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது . நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்ததன் காரணமாகக் கல்லூரிகள் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்டன .அதன் தொடர்ச்சியாகப் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12 வகுப்புகளுக்குக் கடந்த மாதம் 19 ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது .
இந்த நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று முதல் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப்பின் வகுப்புகள் தொடங்கப்பட்டால் மாணவர்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.அனைத்து பள்ளிகளிலும் காலை முதலே மாணவர்கள் ஆர்வமாக வந்தனர். கொரோனா வெப்ப பரிசோதனை மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட நெறிமுறைகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.10 மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர் .