தி. மு. க. தலைவர் கருணாநிதி அவர்களின் வாழ்க்கை வரலாறு

Advertisement
 
பிறப்பு
 
கருணாநிதி அவர்கள் திருக்குவளை என்ற சிறிய குக்கிராமத்தில் ஜூன் 3ஆம் தேதி 1924ஆம் ஆண்டு முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார். ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்; வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில் ஒரு கோவிலில் நடன கலைஞராக இருந்தார். கருணாநிதி அவர்களின் இயற்பெயர் ‘தட்ஷிணாமூர்த்தி’இ பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். அவரது குழந்தைப்பருவமும் ஆரம்பக்கல்வியும் திருப்திகரமாக இல்லாதபோதிலும் அவர் தமிழ் இலக்கியத்தின் மீது மிகவும் பற்றுடையவராக இருந்தார்.
 
வாழ்க்கையின் அடிதளம் :
 
 
தமிழ் திரையுலகில் கதை-வசனம் எழுதுபவராக .இருந்தார். அவருடைய திரை வசனங்கள் மூலம் அர்த்தமுள்ள சமூக செய்திகளை வெளிப்படுத்த முயன்றார். அவரது கதைகளனைத்தும் ‘விதவை மறுமணம்  ‘ஜமீன்தார் முறையை ஒழித்தல்’  ‘மத பாசாங்குத்தனத்தை ஒழித்தல்’  ‘தீண்டாமை அழிப்பு’ மற்றும் ‘சுய மரியாதை திருமணம் ஒழிப்பு’ போன்றவற்றை சார்ந்தே இருக்கும். பாரம்பரிய இந்து மத சமூகங்கள் எதிர்த்த பிராமண ஆதிக்கத்தின் எதிர்மறை அம்சங்களை தனது படமான ‘பராசக்தியில்’ பிரதிபலித்தார்.
 
பல சர்ச்சைகள் இருந்தாலும் இப்படம் பரவளான விளம்பரம் பெற்று மாநிலத்திலுள்ள அனைத்து பார்வையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் திரைக்கதையிலுள்ள மரபுசாரா கருப்பொருள்களே அவரை அக்காலத்தில் மிகவும் பிரபலமாக்கியது. திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதைத் தவிர கருணாநிதி அவர்கள் பல்வேறு கவிதைகள் கடிதங்கள் புத்தகங்கள் வரலாறு வரலாற்று நாவல்கள் இசை வசனம் நாடகங்கள் கட்டுரைகள் சிறுகதைகள் போன்றவற்றையும் எழுதியிருக்கிறார். 
 
தனிப்பட்டவாழ்க்கை 
 
கருணாநிதி அவர்கள்  மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியான பத்மாவதி அவர்களுக்கு எம்.கே. முத்து என்று ஒரு மகன் பிறந்தார். அவரது முதல் மனைவி திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார். கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்களே அழகிரி ஸ்டாலின் செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்கு பிறந்தவர் தான் கனிமொழி.
 
அரசியல் அடிதளம்
 
இளைஞர்களுக்கான உள்ளூர் சமூக அமைப்பை முதலில் உருவாக்கிய பின் சமூகப்பணி ஆதரவைப் பெற்றுத் தொடங்கினார். அவர் மாணவர்களுக்கான மாணவர் அமைப்பை ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற பெயரில் தொடங்கினார். இதுவே அவர் சமூக காரணங்களில் ஈடுபட வழிவகுத்தது. இந்த காலக்கட்டத்தில் தனது வேலைகளை விளம்பரம் செய்ய பத்திரிக்கை என்னும் சக்தியை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார்.
 
இதன் காரணமாக தனது சொந்த தலையங்க பத்திரிக்கையை உருவாக்கினார். 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று  அவர் தனது பத்திரிக்கையான “முரசொலியை” தொடங்கினார். அப்பொழுது முதல் இந்த பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் இருந்து வருகிறார். எழுத்துத்திறன் கொண்ட கருணாநிதி அவர்கள்  தனது பத்திரிகைகள் மூலமாக தனது கட்சி உறுப்பினர்கள் பற்றியும் அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார். மேலும் ‘குடியரசு’ ‘முத்தாரம்’ ‘தமிழரசு’ போன்ற தனது இதர வெளியீடுகளிலும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறார்.
கள்ளக்குடியில் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருணாநிதி அவர்கள் ஒரு போராளியாக பங்கேற்றார். இதுவே அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்து அவரை ஒரு முக்கிய தலைவராக உருவெடுக்க செய்தது. 1957ல்இ அவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து முதல் முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961ல் தி.மு.க. கட்சியில் சேர்ந்தார் பின்னர்  அதன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் எதிர்க்கட்சி தலைவரானார். 1967ல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்த போது கருணாநிதி அவர்கள் ஒரு சக்திவாய்ந்த செல்வாக்கு நிலைக்கு உயர்ந்தார்.
 
1967ல்  தமிழ்நாடு முதலமைச்சராக பணியாற்றிய  அண்ணாதுரை அவர்கள் திடீர் மரணம் அடைந்ததால் பதவிப் பொறுப்பை தொடர முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின் அண்ணாதுரை வகித்த தலைமையமைச்சர்  பதவியை மு.கருணாநிதி அவர்கள் ஏற்றார். அதன் பின் அவர் 1971 1989 1996 மற்றும் 2006 ல் மீண்டும் தலைமையமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 87 வயதான மு.கருணாநிதி அவர்கள்இ திமுக கட்சியின் ஆணிவேராக மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மாநில அரசியலிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்.
 
வெற்றிப்பாதைகள் :
 
 
கருணாநிதி அவர்கள் 1970ல் பாரிஸில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் ஒரு கெளரவ உயர் பதவியாளராக இருந்தார். 1987ல் அவர் மலேஷியாவில் நடந்த  உலக தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.  2010 க்கான  ‘உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ. ஆர். ரகுமான் அமைத்தார்.
 
தமிழ் இலக்கியத்தில் தனது இலக்கிய பங்களிப்பைத் தவிர கருணாநிதி அவர்கள் தனது மக்கள் நலனிற்காக தனது ஆதரவை நீட்டித்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள் தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டார். சமூகநலன்களை நோக்கி இன்றும் அவருடைய வேலை தொடர்கிறது. ஐ.டி துறையை மாநிலத்தில் வரவேற்கும் விதமாக அவருடைய பதவி காலத்தில்  டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். ஒரகடத்தில்  புதிய டிராக்டர் உற்பத்தி செய்யும் செல்லைத் தொடங்கினார். மஹிந்திரா மற்றும் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகிறது
 
கருணாநிதியின் காலச்சுவடுகள்
 
1924 - திருக்குவளை என்னும் கிராமத்தில் ஜூன் 3ம் தேதி பிறந்தார்.
1942 - பத்திரிக்கை ‘முரசொலி’ நிறுவப்பட்டது.
1957 - மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1961 - திமுக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1962 - தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
1967 - பொது நல அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
1969 - முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார்.
1970 - உலகத் தமிழ் மாநாட்டின் ஒரு அங்கமாக இருந்தார்.
1971-இரண்டாவது முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989 - 1991: எம். ஜி. இராமச்சந்திரன் மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சியமைத்தார்.
1996 -  நான்காவது முறையாக முதலமைச்சரானார்.
2006 - ஐந்தாவது முறையாக மாநிலத் தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் முதலமைச்சரானார்.
 
விருதுகள்
 
அண்ணாமலை பல்கலைக்கழகம் இவரை கெளரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது.
தமிழ் பல்கலைக்கழகம் அவரது படைப்பான “தென்பாண்டி சிங்கம்” என்ற புத்தகத்திற்கு ‘ராஜா ராஜன் விருதை’ வழங்கியது.
 
தமிழ்நாட்டு கவர்னரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தனர்.
 
தமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சி அவருக்கு “முஸ்லீம் சமூக நண்பர்” என்ற பட்டதை வழங்கியது.
 
இவ்வாறு கருணாநிதியின் காலவரையறையான 03-06-1924 முதல் 07-08-2018 வரை அவரது அயராது உழைப்பும், கலைத்துறை சாதனையும், சீர்திருத்தமும், மக்களுக்காக ஆற்றியத் தொண்டும,; தமிழக அரசியல் பங்கும் எண்ணில் அடங்காதவையாகும்.
 
இத்தகைய சிறப்பு வாய்ந்த கலைஞர் கருணாநிதி, ஓய்வில்லாமல் தமிழகத்தின் சூரியனாய்த் திகழ்ந்தவர். இவரின் உடல் அண்ணாவுடன் அண்ணா சமாதி அருகே ஐக்கியமாகிறது. இதோ.. இந்த சூரியன் தமிழகத்தின் கிழக்கு திசையில் மெரினா கடற்கரையில் ஓய்வுகொள்கிறது.
Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
/body>