சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிபதியாக தால் ரமானி வரும் 12ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து வந்தவர் இந்திரா பானர்ஜி. இவர், கடந்த 7ம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி ஏற்றார். இதனால், காலியாக இருந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் தாகில் ரமானி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த ஆணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தால் ரமானி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வரும் 12ம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். இவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆளுநர் மாளிகையில் பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.
தாகில் ரமானி மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 1958ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி பிறந்தார். 1982ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து மகாராஷ்டிரா மற்றும் கோவா பார்கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார். பின்னர், கடந்த 2001ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக தாகில் ரமானி பதவி ஏற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.