இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேஷியாவில் கடந்த மாதம் 29ம் தேதி லம்போக் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி 16 பேர் பலியாகினர். தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை 6.9 ரிக்டர் அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு சுமார் 355 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், லம்போக் தீவில் நேற்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், ரிக்டர் அளவு 5.6ஆக பதிவாகி உள்ளது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதில், 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும், இந்த மொத்த நிலநடுக்கத்தில் இதுவரை 319 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 1400 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.