குரூப் 2 தேர்வுக்கு 1.43 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பம்

குரூப் 2 தேர்வுக்கு இதுவரை ஒரு லட்சத்து 43 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Aug 23, 2018, 20:13 PM IST

குரூப் 2 தேர்வுக்கு இதுவரை ஒரு லட்சத்து 43 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TNPSC Group 2

சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 1199 பதவிகளுக்கான குரூப் 2 தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் வரவேற்கப்படுகிறது. இதுவரை 1 லட்சத்து 43 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித் துள்ளனர்.

செப்டம்பர் 9ஆம் தேதி வரை டிஎன்பிஸ்சி விண்ணப்பிக்கலாம் என்பதால், மாதத்தின் முதல் வாரத்திற்குள் மேலும் 7 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என தேர்வாணையம் எதிர்பார்க்கிறது. நவம்பர் 11 ம் தேதி காலை 10 மணி்முதல் 1 மணி வரை போட்டித்தேர்வு நடக்கிறது.

வழக்கத்தைவிட குரூப் 2 நிலையில், 1,199 இடங்கள் அறிவித்திருப்பதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எழுத்துதேர்வில் தேர்ச்சி பெறுவர்கள், நேர்முகத்தேர்வு நடத்தி, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading குரூப் 2 தேர்வுக்கு 1.43 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை