கருணாநிதியை தத்ரூபமாக வடித்த சிற்பிகள்

கருணாநிதியின் தத்ரூப சிலைகள்

Aug 23, 2018, 21:46 PM IST

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சிற்பிகள் மெரினாவில் காட்சிபடுத்தியுள்ள கருணாநிதியின் தத்ரூப சிலைகள், ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.

Karunanidhi

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியை சேர்ந்த சூர்யா சிற்பக்கலை நிபுணர்களான வெங்கடேஸ்வரா ராவ், ரவிச்சந்திரன் இணைந்து திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலைகள், அமர்ந்துள்ள சிலை என நேரில் காண்பதைப் போன்று தத்ரூபமாக சிலைகளை தயார் செய்துள்ளனர்.

இதுகுறித்து சிற்பக் கலை நிபுணர் வெங்கடேஸ்வர ராவ் கூறுகையில் திமுக தலைவர் கலைஞர் "கருணாநிதி மக்களின் பேராதரவு பெற்றவர். அவர் மறைவிற்குப் பிறகு 13 நாட்களில் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு அவரின் பல்வேறு வடிவங்களிலான சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது."

"இந்த சிலைகளை மதுரை மாவட்டம் திருமங்கலம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சேர்ந்த தி.மு.க தொண்டர்கள் தங்களுக்கு வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலைகள் சென்னை மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது"

சிற்பக் கலை நிபுணர் ரவிச்சந்திரன் பேசுகையில், "சிற்பக்கலையில் மாஸ்டர் டிகிரி செய்துள்ளேன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வடிவமைக்கப்பட்டு வரும் ராமானுஜர் சிலை, குஜராத்தில் அமைக்கப்பட்டு வரும் படேல் சிலை சீனாவிலிருந்து தயார் செய்யப்பட்டு வருகிறது."

"ஆனால் அதற்கு இணையாக நம் நாட்டு பண்டைய முறைப்படி சிலை தயாரிப்பில் அதைவிட மிகவும் சிறப்பாக செய்வதற்கான திறமைகள் எங்களிடம் உள்ளது. அரசு இதனை அடையாளம் கண்டு தங்களின் கலையை நிரூபிக்கும் விதமாக வாய்ப்பை வழங்க வேண்டும்"

"மேலும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிலைகள் இங்கு இருந்து தயார் செய்யப்பட்டு நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு அவர்களின் ஆதரவாளர்கள் பெற்றுச் செல்கின்றனர் " என அவர் தெரிவித்தார்.

You'r reading கருணாநிதியை தத்ரூபமாக வடித்த சிற்பிகள் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை