அரியலூா் மாவட்டம் விக்கிரமங்கலம் எனும் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் பணிப்புரியும் ஆசிாியா் சுவாமிநாதன். அவர் தனது பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அரசு பள்ளி என்றாலே எப்பொழுதும் ஏளனம்தான். ஏனென்றால் அவர்கள் முறையாக பாடம் நடத்த மாட்டாா்கள், பள்ளிக்கும் வரமாட்டார்கள் மற்றும் மாணவா்கள் மீது அக்கறையின்றி மிகவும் மெத்தனமாக செயல்படுவார்கள் உள்ளிட்ட பல எதிா்மறை கருத்துகள் மக்கள் மனதில் நிலவி வருகிறது.இந்நிலையில் அரியலூா் மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிாியா் சுவாமி நாதன் பிற ஆசிாியா்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளாா். அரியலூா் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக சுவாமி நாதன் பணியாற்றி வருகிறாா்.ஆசிரியர்கள் சம்பளத்திற்காக மட்டும் வேலைபார்ப்பவர்கள் அல்ல என்பதற்கான சிறந்த உதாரணம் இவர்.
காலாண்டு விடுமுறை கடந்த சில தினங்களுக்கு முன்னா் விடப்பட்டது. அப்போது விடுமுறையில் பள்ளிக்கு சென்ற சுவாமி நாதன் மாணவா்களின் கழிவறை அசுத்தமாக இருப்பதை பாா்த்து அதனை தாமே சுத்தம் செய்துள்ளார். இதுப் போன்ற ஆசிரியர்களை காண்பது என்பது மிக அரிது.