புதுமண தம்பதியை இரும்பு கம்பியால் தாக்கி நகை கொள்ளை- திருவான்மியூரில் பயங்கரம்

திருவான்மியூர் கடற்கரையில் பட்ட பகலில் புதுமண தம்பதியை இரும்பு கம்பியால் தாக்கி மர்ம நபர்கள் 12 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த கதிரவனுக்கும், அனிதா என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. புதுமண தம்பதியினர், இரு சக்கர வாகனத்தில் இன்று அதிகாலை திருவான்மியூர் கடற்கரைக்கு வந்தனர். 
 
புதுமண தம்பதி மிகவும் குதூகலமாக கடலில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆளரவமில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அனிதாவின் செயினை பறிக்க முயன்றுள்ளனர். கதிரவன் மர்ம நபர்களை தடுக்க முயன்றுள்ளார். 
 
ஆனால்,அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால், கதிரவனையும், அனிதாவையும் பலமாக தாக்கியுள்ளனர். இருவரும் மயங்கி கீழே விழுந்த பின்னர், கழுத்தில்,கைகளில் இருந்து 12 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். 
 
புதுமண தம்பதியை பார்த்த பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த திருவான்மியூர் போலீசார், இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பட்ட பகலில் புதுமண தம்பதியை இரும்பு கம்பியால் தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!