உத்திர பிரதேசத்தில் கணவருடனான தகராறில் நான்கு குழந்தைகளுக்கும் தனக்கும் தாய் ஒருவர் தீ வைத்துக்கொண்டார். சிறுவன் ஒருவன் உயிருக்குப் போராடி வருகிறான். மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.
உத்திர பிரதேச மாநிலம், ஹமிர்பூர் மாவட்டத்தில் ராத் காவல்நிலைய எல்லைக்குள் உள்ள கிராமம் அம்காவ். இங்கு வசித்து வந்தவர் பிரேம்வதி என்ற சுகோ (வயது 28). இவருக்கு சப்னா (வயது 7), பிரசாந்த் (வயது 5), ஸ்நேகா (வயது 3), திவ்யான்ஷ் (வயது 1) என்ற நான்கு குழந்தைகள்.
பிரேம்வதிக்கும் அவரது கணவருக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது. அதன் காரணமாக மனம் வெறுத்த பிரேம்வதி, நான்கு பிள்ளைகளின் கை, கால்களையும் கட்டியுள்ளார்.
பின்னர் பெற்ற குழந்தைகள்மேல் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்கொளுத்தியுள்ளார். பிள்ளைகளின் மேல் தீ வைத்துவிட்டு, தானும் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடந்த இந்த சம்பவத்தில் ஒரு வயது குழந்தையான திவ்யான்ஷ், நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளான்.
சிறுமி சப்னா, சமுதாய நல மருத்துவனையிலும், பிரேம்வதி, பிரசாந்த் மற்றும் ஸ்நேகா ஆகியோர் ஜான்சி மருத்தவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சிறுவன் பிரசாந்த் மட்டும் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறான்.
உயிரிழந்தோரின் உடல்கள் உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஹமிர்பூர் மாவட்ட காவல் ஆணையர் ஹேம்ராஜ் மீனா தெரிவித்துள்ளார்.