மதுரை - ராமேஸ்வரம் இருப்புப் பாதை மின்மயமாகிறது

Madurai - Rameswaram is the power path

by SAM ASIR, Oct 25, 2018, 07:06 AM IST
மதுரை - ராமேஸ்வரம் இடையேயான 161 கி.மீ. தூர இருப்புப் பாதை, மின்சார மயமாக்கப்படுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று பாம்பன் பகுதியை ஆய்வு செய்த ரயில்வே வாரிய உறுப்பினர் கான்ஷியாம் சிங் இதை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மதுரை ரயில்வே கோட்டம் முழுமையும் மின் மயக்கமாக்கப்படுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் இந்திய ரயில்வே முழுமையாக மின்மயமாக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளோடு உள்ளனர். டீசல் எஞ்ஜின்களுக்கு பதிலாக மின்சார எஞ்ஜின்களை கொண்டு ரயில்கள் இயக்கப்படுவதால் ஆண்டொன்றுக்கு 13,500 கோடி ரூபாய் ரயில்வேக்கு மிச்சமாகிறது.
 
மதுரை - ராமேஸ்வரம் இடையேயான 161 கி.மீ. தூரமும் 158 கோடி செலவில் மின்மயமாக்கப்படும். இந்தப் பகுதியில் கிடைக்கவேண்டிய சில அனுமதிகளுக்காக பணி தாமதமாகி வருகிறது. புதிய பாலம் கட்டப்படுவதற்கு திட்டமிடப்பட்டு வரைபடம் தயாரிக்கப்பட்டு வருகிறது. புதிய பாலம் கட்டப்பட காலம் செல்லும் என்பதால், இப்போது இருக்கிற பாலத்திலேயே இருப்புப்பாதை மின்மயமாக்கப்படும் என்று கான்ஷியாம் சிங் கூறினார்.

You'r reading மதுரை - ராமேஸ்வரம் இருப்புப் பாதை மின்மயமாகிறது Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை