டெல்டா மாவட்டங்களில் தொடரும் துயரம்- கனமழையால் மக்கள் தவிப்பு

Heavy Rain in Cauvery Delta Dists

by Mathivanan, Nov 20, 2018, 11:48 AM IST

கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்வதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

கஜா புயலின் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கிறது டெல்டா மாவட்டங்கள். வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் பறிகொடுத்து முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து நிவாரண உதவிகள் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றன. அரசு தரப்பும் நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளும் இந்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

You'r reading டெல்டா மாவட்டங்களில் தொடரும் துயரம்- கனமழையால் மக்கள் தவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை