ஜென் இசட் மற்றும் மில்லேனியல்ஸ் எனப்படும் 90களின் பிற்பாதி மற்றும் புத்தாயிரத்தில் (2000ம் ஆண்டு) பிறந்த இளந்தலைமுறையினரை கருத்தில் கொண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ வரிசை ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது. கேலக்ஸி ஏ வரிசையில் இதுவரை ஏ50, ஏ30, ஏ20, ஏ10, ஏ70 மற்றும் ஏ2கோர் ஆகியவை வெளியாகியுள்ளன. சுழலும் காமிரா வசதி கொண்ட ஏ80 தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ80 சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.7 அங்குலம்; எஃப்ஹெச்டி; 1080X2400 தரம்; சூப்பர் AMOLED
சுழலும் காமிரா: சுழலக்கூடிய காமிராக்களை முன்பக்கமும் பின்பக்கமும் கொண்டது.முப்பரிமாண (3D) தொழில்நுட்பத்துடன் கூடிய 48 எம்பி ஆற்றல் கொண்ட முதன்மை காமிரா மற்றும் 8 எம்பி ஆற்றல் கொண்ட அல்ட்ரா வைடு 123 டிகிரி காமிரா
இயக்க வேகம்: 8 ஜிபி RAM
சேமிப்பளவு: 128 ஜிபி சேமிப்பு திறன்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை
பிராசஸர்: ஆக்டோ கோர் (2.2 GHz Dual + 1.8 GHz Hexa)
சாதனத்தின் அளவு: 165.2 X 76.5 X 9.3 மிமீ
மின்கலம்: 3700 mAh (25 W அதிகவேக மின்னேற்ற வசதியுடன்)
மலேசியா, மத்திய அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இணையம் மூலம் விற்பனைக்கு வந்துள்ள கேலக்ஸி ஏ80, இம்மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணைய அங்காடிகள் மட்டுமின்றி குறிப்பிட்ட விற்பனை நிலையங்களிலும் இது நேரடியாக விற்பனை செய்யப்படும்.