நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் அதிரடி விலை குறைப்பு

Nokia 6point1 smartphone at low price

by SAM ASIR, Jul 8, 2019, 23:00 PM IST

பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோருக்கு நற்செய்தியாக நோக்கியா நிறுவனம் தனது நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது. 

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 5.5 அங்குலம் முழு ஹெச்டி தரம்

இயக்கவேகம்: 3 ஜிபி RAM மற்றும் 4 ஜிபி RAM

சேமிப்பளவு: 32 ஜிபி மற்றும் 64 ஜிபி

(சேமிப்பளவு 128 ஜிபி வரை உயர்த்தப்படக்கூடியது)

காமிரா: 16 எம்பி ஆற்றல் பின்பக்க காமிரா

8 எம்பி ஆற்றல் கொண்ட முன்பக்க காமிரா

மின்கலம்: 3000 mAh (வேகமான

மின்னேற்றத்திற்கு 18W திறன்)

பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிரகன் 630 சிஸ்டம்

ஆன் சிப்; ஆக்டா கோர்

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 (தற்போதைய ஆண்ட்ராய்டு 9.0 பை மேம்படுத்த இயலும்)

4ஜி VoLTE, புளூடூத் 5.0, யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட வசதிகள் கொண்டது. 3 ஜிபி RAM இயக்கவேகம் மற்றும் 32 ஜிபி சேமிப்பளவு கொண்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் ரூ.6,999 விலையிலும் 4 ஜிபி RAM இயக்கவேகம் மற்றும் 64 ஜிபி சேமிப்பளவு கொண்ட போன் ரூ.9,999 விலையிலும் அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் நோக்கியாவின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் கிடைக்கும்.

More Technology News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை